வேளாண் சட்டத்தை அரசியலுக்காக மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கருத்து

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டத்தை அரசியலுக்காக மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார் என அதிமுக துணை ஒருங்கிணைப் பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று கிருஷ்ணகிரியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் நடைமுறைகளுக்கு ஏற்ப எங்களின் செயல்பாடுகள் இருக்கும்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் கருத்துகள் ஏற்புடையது அல்ல. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், விவாதம் நடத்த தேவையில்லை. தமிழகத்தில் யாருடைய ஆட்சி காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து மு.க.ஸ்டாலின் அல்லது ஆ.ராசா விவாதிக்க தயாரா?

வேளாண் சட்டங்களை, தமிழகத்தில் எந்த விவசாயிகளாவது எதிர்க்கிறார்களா? மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கின்றன. வேளாண் சட்டத்தை அரசியலுக்காக மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார். எங்களுக்கும், பாஜகவுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. கொள்கை ரீதியாகக் கூட கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனாலும் தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார். இந்நிகழ்வின் போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்