ஊத்தங்கரையில் மழையால் சேறும், சகதியுமான சாலை

By செய்திப்பிரிவு

ஊத்தங்கரையில் ஏற்கெனவே சேதமான நிலையில் உள்ள சாலை, தொடர் மழையால் சேறும், சகதியுமாக மாறியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வழியாக திருவண்ணா மலை-கிருஷ்ணகிரிக்கு செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த நிலையில், பல்வேறு காரணங்களால் சீரமைக்கப்பட வில்லை. இச்சாலை சேதமாகி பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஊத்தங்கரை பகுதியில் பெய்த தொடர் மழையால் சேதமான சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் சிலர் கூறும்போது, முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையை சீரமைக்கக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை பயனில்லை.

கிருஷ்ணகிரியில் இருந்து ஊத்தங்கரைக்கு வந்து சேர இருசக்கர வாகனங்களில் 2 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. 4 சக்கர வாகனங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

குறிப்பாக இச்சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. தற்போது பெய்துள்ள மழையால் சாலையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. சாலையைச் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்