கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் பாகு பாடின்றி முழுமையாக நிவாரணம் கிடைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
‘நிவர்', 'புரெவி' புயல்களால் பெய்த கனமழை காரணமாக, தமிழகத்தில் 20 லட்சம் ஏக்கர் அளவுக்கு விளைநிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டு, 6 லட்சம் ஏக்கர் பயிர்கள் முற்றிலும் அழிந்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர், இதுவரை 1.32 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்துவ தாகவும் தெரிவித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே, இதை மறுபரிசீலனை செய்து, சிறிய, பெரிய விவசாயிகள் என்ற பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், இழப்பீடு தொகை குறித்தும் முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். புதிய வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், வேளாண் சட்டத்துக்கு பரிந்து பேசிவரும் முதல்வர், தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago