சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப் பூர் அருகே உள்ள மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.பாரதி(30). இவர், கடந்த 2018-ல் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, கீரனூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாரதியை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி ஆர்.சத்யா குற்றம் சாட்டப்பட்ட பாரதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப் பீடாக தமிழக அரசு ரூ.1.50 லட்சம் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்