தமிழக முதலமைச்சர் தன்னை விவசாயி என்று கூறிக்கொண்டு பாஜகவிற்கு ஆதரவாக வேளாண் சட்டத்தை ஆதரிப்பது வேதனைக்குரியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
வேலூர் தலைமை தபால் நிலையம் எதிரே மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றுப் பேசும்போது, ‘‘கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. விளை பொருட்களை வாங்கி கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைக்கவே இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வேளாண் சட்டத்தை அவசர சட்டமாக கொண்டுவந்து குரல் வாக்கெடுப்பு மூலம் குறுக்கு வழியில் அமல்படுத்தியுள்ளனர்.
வேளாண் சட்டங்களால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தமிழக முதலமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. கனடா பிரதமர், ஆஸ்திரேலிய அமைச்சர், லண்டன் எம்.பி.க்கள் என உலக நாடுகளே டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் தன்னை விவசாயி என்று கூறிக்கொண்டு பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவது வேதனைக்குரியது.
என்மீது இல்லாத, பொல்லாத கதைகளை சொல்லி பழி போட பார்த்தார்கள். கடைசியில் அவர் களே முகத்தில் கரியை பூசிக் கொண்டார்கள்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago