ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க பிரிதி நிதித்துவ பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் ஜோதி சங்கர் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் தர் வரவேற்றார். மாநிலச் செயலாளர் நம்பிராஜன் தொடக்க உரையாற்றினார்.

கூட்டத்தில், “ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தற்காலிக பணிநீக்கம் மற் றும் இட மாற்றம் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும், அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சேத்துப்பட்டில் நீதிமன்றம், கருவூலம் மற்றும் தலைமை மருத்துவமனையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்டச் செயலாளர் பிரபு, பொதுச் செயலாளர் பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்