ஆடைத் துறையின் மேம்பாட்டுக்கு, ஏஇபிசி (APPAREL EXPORTPROMOTION COUNCIL) அமெரிக்காவின் துக்காச் ஃபேஷன் டெக்னலாலஜி சொல்யூசன் நிறுவனத்துடன் இணைந்து ‘ஆடைத் தொழிலில் கட்டிங் ரூம் இன்ஜினியரிங்’ குறித்த வலைதளக் கருத்தரங்கை நேற்று நடத்தியது.
இதில் ஏஇபிசி தலைவர் ஏ.சக்திவேல் தலைமை வகித்து பேசும்போது, ‘‘கட்டிங் துறையில் 10 சதவீதம் துணியின் கழிவை சேமிப்பது, ஊழியர்களின் 60 சதவீத வேலைப் பளுவைக் குறைத்து, ஆடை உற்பத்தித் திறனை பெருக்குவதுமே இந்த கருத்தரங்கின் நோக்கம். அமெரிக்காவின் துக்காச் ஃபேஷன் டெக்னலாலஜி சொல்யூசன் நிறுவனம் ஆடைத் துறையின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி, ஆடைத் துறையில் சிறந்த ஆடை வடிவமைப்புகளால் செயல்படுத்தப்படுகின்றன’’ என்றார்.
துக்காச் ஆடை மற்றும் ஃபேஷன் துறைத் தலைவர் ராம்சரீன் பேசும்போது, ‘‘புதிய தொழில் முறை அணுகுமுறைகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதனால் ஒரு தொழிலாளி, ஒரு ஷிப்டில் துணிகளை வெட்டும்போது 10 சதவீதத்துக்கும் அதிகமான சேதாரத்தை குறைத்து, துணியை சேமிக்கலாம். ஊழியர்களின் 60 சதவீத வேலைப்பளுவை குறைக்கலாம்’’ என்றார்.
ஆடை வடிவமைப்பாளர் சவனா க்ராஃபோர்ட், ஆடை உற்பத்தி மற்றும் ஆடை வடிவமைப்பில் உள்ள முக்கியத்துவம் பற்றி பேசினார். இறுதியில் ஏற்றுமதியாளர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் கருத்தரங்கில் பதில் அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago