தமிழக வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.நடராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் மற்றும் இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்புப்படியும் வழங்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகங்களில் இரவுக்காவல் பணியை நிறுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக வழங்க வேண்டும். பணி மூப்பு காலங்களை 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டாக குறைக்க வேண்டும். கிராம உதவியாளர் ஓய்வு பெறும்போது, கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கிராம உதவியாளர் பணியிடத்தை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளகிராம உதவியாளர்களுக்கு ஓட்டுநர் பணி வழங்க வேண்டும்என்பன உட்பட பல்வேறுகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. இதன் நகலை தமிழக முதல்வருக்கும் நிர்வாகிகள்அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago