திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ராஜகுமார் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு: தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமானத் தொழிலில் அனுபவம் இருந்தும், உரிய சான்றிதழ் இல்லாத தொழிலாளர்களுக்கு கட்டுமானத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கொத்தனார், கம்பி வளைத்தல், பிளம்பர், தச்சுத் தொழில், கட்டிட வேலை, மேற்பார்வையாளர், எலெக்ட்ரீசியன், டைல்ஸ் பதிப்பது, பெயின்டர், நில அளவையர் ஆகிய பிரிவுகளில் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் இலவச பயிற்சி, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
3 நாட்களுக்கு ஊக்கத் தொகையாக நாளொன்றுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படும். பயிற்சிபெற விரும்புவோர் திருப்பூர்தொழிலாளர் உதவி ஆணையாளர்(சமூக பாதுகாப்புத் திட்டம்)அலுவலகத்தில் விண்ணப்பத்தைபெற்று பூர்த்தி செய்து, விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago