செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில், டெல்லியில் போராட்டம் செய்துவரும் விவசாயிகளுக்குஆதரவாக பாட்டாளி வர்க்க சமரன்அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில்மாவட்ட அமைப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 30-க்கும்மேற்பட்ட குழந்தைகளும் கலந்துகொண்டனர். அப்போது குழந்தைகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த குழந்தைகள் நலக் குழும அதிகாரி ஆலிஸ் அற்புதம் ஆர்ப்பாட்டத்தில் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பிய 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மீட்க முயற்சி செய்தார். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் குழந்தைகள் நலக்குழும அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் இளம் சிறார்கள், கை குழந்தைகளுடன் பெற்றோர் அதிகம் பங்கேற்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே தமிழக அரசு இதற்கு உரிய தீர்வு காணவேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago