மாவட்டம் விட்டு மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எளிதாக மாற்றிக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள், பல்வேறு காரணங்களால் வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயரும் போது, வேலைவாய்ப்பு பதிவை அவர்கள் வசிக்கும் மாவட்டத்துக்கு மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வாறு மாவட்டம் விட்டு மாவட்டம் வேலைவாய்ப்பு பதிவினை மாற்றுவதற்கு, வட்டாட்சியரிடம் குடும்ப குடிப்பெயர்ச்சி சான்றிதழ், இருப்பிடச் சான்று மற்றும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இச்சான்றிதழ்கள் பெறு வதில் காலதாமதம் ஏற்படு வதால், வேலைவாய்ப்பு பதிவு செய்தவர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனை எளிய முறையில் மாற்றத் தேவையான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இனிமேல் மாவட்டம் விட்டு மாவட்டம் வேலைவாய்ப்பு பதிவினை மாற்றம் செய்வதற்கு விண்ணப்பதாரர்கள், சுய சான்றளிக்கப்பட்ட குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, நிலையான கணக்கு அட்டை, வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணம் சமர்பிக்கலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago