வேளாண்மை சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்த ரசன் தெரிவித்தார்.
கரூரில் அவர், நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசு நிறைவேற்றிய 3 புதிய வேளாண்மை சட்டங்கள் மற்றும் மின் திருத்த மசோதா ஆகியவற்றை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 14-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு நயவஞ்சகமாக, சூழ்ச்சியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் உடன்பாட்டை ஏற்கவில்லை என பழிசுமத்தி தப்பிக்க முயற்சிக்கிறது. ஆனால், வேளாண்மை சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்.
தமிழக முதல்வர் தன்னை விவசாயி என கூறிக்கொண்டு, இந்த சட்டத்தை ஆதரிப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இச்சட்டங்களை திரும்பப்பெற முதல்வர் வலியுறுத்த வேண்டும்.
வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை மத்தியக் குழு பார்வையிட்டு வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பயிர்கள், இடிந்த வீடுகள், மனித, கால்நடைகள் உயிரிழப்பு ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கினாலும் விவசா யிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அரசு இத்திட்டத்தை கைவிடவேண்டும்.
ரஜினி கட்சி தொடங்க வேண்டிய அவசியம் என்ன? ரஜினி கொள்கையை அறிவித்த பின்னர் அது குறித்து கருத்து தெரிவிக்கலாம்.
திருப்பூரில் டிச.15, 16, 17-ம் தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர் பான முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago