காணாமல் போன செல்போன்கள் மீட்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 2019 முதல் இதுவரை செல்போன் காணாமல் போனதாக காவல் நிலையங்களில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்த சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஐஎம்இஐ எண்ணை வைத்து 102 செல்போன்கள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த 15.10.2020 அன்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தற்போது மேலும் 60 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம். இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநபு கலந்துகொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். எஸ்பி ஜெயக்குமார் உடனிருந்தார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக் கப்பட்டன.

இந்நிலையில் 2-ம் கட்டமாக 114 செல்போன்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இந்த செல்போன்களை மீட்ட சைபர் கிரைம் போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பாராட்டு தெரிவித்தார். ரூ.13 லட்சம் மதிப்பிலான அந்த செல் போன்களை உரியவர்களிடம் அவர் ஒப்படைத்தார்.

எஸ்பி கூறும்போது, “ வங்கி விவரங்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்க கூடாது. செல்போன் தொலைந்து, அது சமூக விரோதிகள் கையில் கிடைத்து விட்டால், அதை அவர்கள் பல்வேறு சட்ட விரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்