வேலூர் சங்கரன்பாளையத்தில் சேறும், சகதியுமான சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு நூதனப்போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக, வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மண்சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் சங்கரன்பாளையத்தில் பாதாள சாக்கடை பணிகள் நிறை வடைந்து பல மாதங்களாகியும் சாலையை சீரமைக்காததால், சமீபத்தில் பெய்த கனமழையால் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன. மேலும், சங்கரன் பாளையம் காமாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கனமழை காரணமாக சாலைகள் முழுவதும் சேறும், சகதியுமாக மாறியுள்ளன. கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ள தாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித் தனர்.
மேலும், வேலூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு பாஜக மாவட்டச்செயலாளர் சரவண குமார், மாவட்டத் தலைவர் ராஜேந் திரன், மாவட்ட பொதுச்செயலாளர் பாபு, இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஹரி பிரசாத் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து, மாநகராட்சி நிர்வாகத்தை கண் டித்து முழக்கம் எழுப்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago