தொங்குட்டிப்பாளையத்தில் உலக மண் தின நிகழ்ச்சி

பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், தொங்குட்டிப்பாளையம் கிராமத்தில் உலக மண் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. திட்ட ஒருங்கி ணைப்பாளர் ந.ஆனந்தராஜா தலைமை வகித் தார்.

வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மண்ணியல் துறைதொழில்நுட்ப வல்லுநர் ச.தேன்மொழி பேசும்போது, "மண்ணை உயிரோட்டமுள்ளதாக வைத்துக் கொள்வதன் மூலமாக, மண் வாழ் உயிரினங்களை பாதுகாக்கலாம். மண் வளத்தை பாதுகாப்பது அடுத்த தலைமுறைக்கான சொத்து" என்றார்.

மண் மாதிரி சேகரிக்கும் முறைகள் குறித்தும், நடமாடும் மண் பரிசோதனை கூடத்தில் மண் மாதிரி ஆய்வு செய்வது குறித்தும் வேளாண் அலுவலர் பொ.சங்கீதா விளக்கினார்.

மண் மாதிரி சேகரித்தல் குறித்த கையேடு வெளியிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்