காய்கறிகள், பழங்கள், இதர அழுகும் பொருட்களுக்கான முதன்மை பதப்படுத்தும் மையங்களை குழு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து முதன்மை பதப்படுத்தும் மையங்களை குழுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர் களுக்கு ஆட்சியர் அறிவுறுத் தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத் தில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர அழுகும் பொருட் களுக்கான, முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதப் படுத்தும் நிலையங் களுக்கான கண்காணிப்புக் குழு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், போச்சம் பள்ளி முதன்மை பதப்படுத் தும் நிலையத்தில் உள்ள நீராவி வெப்பச் செயலாக்க ஆலை, தனிப்பட்ட விரைவான உறைபனி மற்றும் காமா கதிர்வீச்சு கொண்டு பதப்படுத்தும் வசதிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

ஓசூர் வட்டம், மோரனப் பள்ளி கிராமத்தில் 7.67 ஏக்கர் பரப்பளவில் ரூ.20.20 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள சர்வதேச மலர் ஏல மைய கட்டிடப்பணிகள் தொடர் பாகவும் விவாதிக்கப் பட்டது அப்போது, மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து முதன்மை பதப்படுத்தும் மையங்களை குழு பயன் பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்