விழுப்புரம் புறவழி சாலையில் சுரங்கவழி பாதை அமைக்க நிலம்கையகப்படுத்தும் பணி தொடங்கி யுள்ளது.
திண்டிவனம் - திருச்சி புறவழிச் சாலையில் இருந்து விழுப்புரம் நகருக்குள் செல்ல சுரங்கவழி பாதை அமைக்கவேண்டும் எனபொதுமக்கள் மற்றும் அரசியல்கட்சியினர் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் விழுப்புரம் நகருக்குள் சென்னையிலிருந்து வரும்போது அய்யங்கோயில்பட்டு கிராமம் அருகேயும், எல்லீஸ் சத்தி ரம் சாலை அருகேயும் சுரங்க வழிப்பாதை அமைக்க நகாய் ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நிலம்எடுப்பு வட்டாட்சியர் ஜெயலட்சுமிதலைமையிலான வருவாய்த்துறை யினர் அய்யங்கோயில் பட்டு அருகே நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து வருவாய்துறை யினரிடம் கேட்டபோது, "அய்யங் கோயில்பட்டு அருகே 2,500 சதுர மீட்டர் பரப்பளவுக்கு நிலம் கையகப்படுத்தி கொடுக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை கேட்டுள்ளது. அதன்படி நிலத்தை கையகப்படுத்த முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. தற் போது கையகப்படுத்தப்பட உள்ளநிலங்கள் தனியாருக்கு சொந்த மானது.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். இப்பணிகள் முடிந்த பிறகு எல்லீஸ் சத்திரம் சாலையில் சுரங்கவழிப்பாதைக்கான பணிகள் துவங்கும் என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago