இரண்டாம் கட்ட வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம் குறித்த ஆலோசனைக்கூட்டம் திருப்பத் தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலை யில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம் டிசம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. கடந்த மாதம் 21-ம் தேதி மற்றும் 22-ம் தேதிகளில் நடைபெற்ற முதலாவது வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம் மற்றும் ஆன்லைன் மூலம் டிசம்பர் 4-ம் தேதி வரை 23 ஆயிரத்து 323 படிவங்கள் வரப்பெற்றுள்ளன.இந்த படிவங்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் 2-ம் கட்டசிறப்பு திருத்த சுருக்க முகாம் நடைபெற உள்ளது. இதில், வாக் காளர் அடையாள அட்டையை திருத்தம் மேற்கொள்ள விரும்பும்வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள அரசியல் கட்சியினர் அந்தந்த பகுதியில் அரசு அலுவலர் களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
2-ம் கட்ட சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெறுவதற்கு தேவை யான அனைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளும், படிவங்களும் தயார் நிலையில் உள்ளன’’ என் றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சார் ஆட்சியர் வந்தனா கர்க், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தேர்தல் வட்டாட்சியர் பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago