வேலூர் கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (60). வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் பிரபல பிரியாணி கடையின் உரிமையாளர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடன் குடும்பத்தினர் தங்கி இருந்ததால் பூட்டியிருந்த இவரது வீட்டில் கடந்த மாதம் 22-ம் தேதி மர்ம நபர்கள் புகுந்து 250 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
இது தொடர்பாக வேலூர் தெற்கு காவல் நிலைய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், வேலூர் கலால் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படையினர் மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வந்தனர்.
இதில், ஆந்திர மாநில பதிவெண் கொண்ட வாகனம் ஒன்றை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அந்த வாகன பதிவெண் ஹைதராபாத் முகவரியைச் சேர்ந்தது என தெரியவந்தது. விசாரணையில் அந்த வாகனம் தொடர்பான ஆவணங் கள் சில நாட்களுக்கு முன்பு திருடு போனது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், பிரியாணி கடை உரிமையாளர் மோகன் வீட்டில் நகைகளை திருடியவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராயப்பட்டி வெங்கய்யா மற்றும் பில்லா என தெரியவந்தது. இதில், ராயப்பட்டி வெங்கய்யா என்பவர் ஆந்திர மாநிலத் தில் 100-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு களில் தொடர்புடைய பலே கொள்ளை யன் என்பது தெரியவந்தது. தலைமறை வாக உள்ள அவர் வசம் இருந்த சுமார் 110 பவுன் தங்க நகைகளை காவல் துறையினர் மீட்டுள்ளனர். மீதமுள்ள 140 பவுன் தங்க நகைகளை மீட்க தனிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago