கரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்தவர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்புகளுக்கு மூல தன மானியம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசியதாவது: ஊரக புத்தாக்கத் திட்டம் உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்படும் முன்னோடி திட்ட மாகும். ஊரக தொழில்களை மேம் படுத்துதல், வேலைவாய்ப்பு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் போன்றவற்றை நோக்க மாக கொண்டு செயல்படுத்தப்படு கிறது. தேனி மாவட்டத்தில் பெரிய குளம் மற்றும் உத்தமபாளையம் வட்டங்களைச் சேர்ந்த 30 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
சுய உதவிக்குழு மூலம் செயல் படுத்தப்படும் இத்திட்டத்தில் கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தொழில்களை மேம்படுத்தவும், தனிநபர் தொழில்கடனாக ஊராட்சி அளவிலான கூட்ட மைப்புகள் மூலம் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் என்ற அடிப்படையில் 518 குழுக்களுக்கு ரூ.1.20 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட் டங்களுக்கு வேலைக்குச் சென்று கரோனா காலத்தில் வேலை இல்லாமல் மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் தொழில் தொடங்க கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் 24 நபர்களுக்கு ரூ.24 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
சொந்த ஊரிலேயே தொழில் கள் தொடங்கி பயன்பெறும் நோக்கில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்டிகே.ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago