ரஜினிகாந்த் அரசியலுக்கு வரு வதை தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் அதிமுக ஒருங்கி ணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரஜினிகாந்த் முதலில் கட்சியைத் தொடங்கட்டும். அதன் பிறகு என் கருத்தை கூறுகிறேன். ரஜினிகாந்த் அரசிய லுக்கு வருவதை தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்றுள்ளார். அதே போல, நானும் வரவேற்கிறேன்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது, நன்மை பயக்கக்கூடியது என ஏற்கெனவே தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக, 10 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. தற்போது, வயல்களில் இருந்து தண்ணீர் வடிந்துகொண்டிருக்கிறது. மாவட்டத்தில் ஏறத்தாழ 700 வீடுகள் சேதமடைந்துள்ளன. கால்நடைகளும் உயிரிழந்துள் ளன. இதுதொடர்பாக கணக் கெடுப்பு செய்யப்பட்டு, நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago