பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட கச்சனம், பழையங்குடி, தண்டலச்சேரி கல்லூரி, சாய்ராம் காலனி, அபிஷேகக் கட்டளை, பாமணி, நுனாக்காடு, எழிலூர், மருதாவனம், மாங்குடி, அம்மலூர், பாண்டி, விளாங் காடு, ஜாம்புவானோடை, முத்துப் பேட்டை ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த சம்பா, தாளடி பயிர்கள், மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் தங்கவைக் கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் ஆகியவற்றை மாநில உயர் கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, ஆட்சியர் வே.சாந்தா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
ஆய்வுக்குப் பின்னர், அமைச் சர் கே.பி.அன்பழகன் கூறியது: திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 440 ஏக்கர் பரப்பளவுக்கு பயிர்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரத்து 775 ஏக்கர் பரப்பளவிலான சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ளன. இதனால், பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும்.
மேலும், பயிர்க் காப்பீடு செய்யாதவர்களுக்கும் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக நிவாரணம் பெற்றுத் தர வேளாண்மைத் துறையும், வருவாய்த் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago