புதுடெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து திருவண்ணாமலை அருகே சாலை மறியல் கம்யூனிஸ்ட் கட்சியினர் 37 பேர் கைது

By செய்திப்பிரிவு

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதுடெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து, திருவண்ணாமலை அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 37 கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் தொடர்போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தி.மலை மாவட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலத்தில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செய லாளர் சிவக்குமார், ஒன்றியச் செயலாளர் ராமதாஸ், நிர்வாகி கள் மேரி, ஆனந்தன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செயலாளர் முத்தையன், நிர்வாகி தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை - வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட இடதுசாரிகள்,3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையடுத்து, 10 பெண்கள் உட்பட 37 பேரை கலசப்பாக்கம் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்