கோடை சீசனுக்கு தயாராகும் ரோஜா பூங்கா

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசனையொட்டி, உதகை வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் வனத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ரோஜா கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.

தற்போது சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால், வரும் 2021 மே மாதம் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி ஆகியவை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யும் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக உதகை ரோஜா பூங்காவையும் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

முதல் மற்றும் டெரஸ் பாத்திகளில் உள்ள ரோஜா செடிகளைகவாத்து செய்யும் பணிகள் முடிந்துள்ளன. இந்த செடிகளில் பிப்ரவரி மாதம் முதல் ரோஜா மலர்கள் பூக்கத் தொடங்கும்.பூங்காவில் உள்ள புல் மைதானத்தை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்