திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கை வசதி ஏற்படுத்தப்படுமா?

By செய்திப்பிரிவு

மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம், வாராந்திர மக்கள் குறைதீர்கூட்டம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்காக பொதுமக்களும், விவசாயிகளும் ஆட்சியர் அலுவலகம் வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "பொதுமக்கள் நேரில் அளிக்கும் பல மனுக்களுக்கு நடவடிக்கை இல்லை. இதனால், தீர்வு தேடி அதிகாரிகளை நாடுவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வரும் மக்களுக்கு அமர இருக்கை வசதி இல்லை. இதனால், பலரும் அவதிப்படுகின்றனர். நுழைவுவாயில் பகுதியில் தரையில் அமர்ந்துகொள்கின்றனர். பொதுப் பிரச்சினைகளுக்கு பிரதிநிதிகள் சென்றால், கைக்குழந்தை தொடங்கி சிறுவர், சிறுமியர் என பலரும் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, நுழைவுவாயில் பகுதியில் மரங்கள் வைத்துள்ள இடங்களில் கல் இருக்கைகள் அல்லது மர இருக்கைகள்அமைத்தால் பயன்பெறுவார்கள். தற்போது பலரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அமருவதால், கரோனா தொற்று பரவும் சூழலும் ஏற்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்