கோமுகி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை கண்டு பிடிக்கக் கோரி சாலை மறியல்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை கண்டு பிடிக்கக் கோரி உறவினர் கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் தடுப்பணையில், கோமுகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை கடந்த 4-ம் தேதி பார்வையிட சென்ற 3 சிறுவர்களில், வரதரா ஜன் (15) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

ராஜ்குமார் (16) உயிருடன் மீட்கப்பட்டார். ராமு மகன் அஸ்வந்த் (15) மாயமானார். அவரை தீயணைப்புப் படையினர் தேடியும் கிடைக்கவில்லை. சிறுவனை கண்டுபிடிப்பதில் மாவட்டநிர்வாகம் அக்கறை செலுத்த வில்லை எனக் கூறி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் நேற்று மறியல் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் காந்த் பேச்சு வார்த்தை நடத்தினார்.

மாயமான சிறுவனை தேடி வருவதாகவும், விரைந்து கண் டுபிடிக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்