கடலூர் மனநல மருத்துவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

By செய்திப்பிரிவு

கடலூர் அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மனநல மருத்துவர் செல்லப்பிள்ளைக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய மனநல மருத்து வர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் 35-வது ஆண்டு மாநில மாநாடு புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.

பிசி ராய் விருது

இதில் மனநல மருத்துவர் செல்லப்பிள்ளைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை சங் கத்தின் தென்மண்டல தலைவர் மருத்துவர் ராமகிருஷ்ணன் வழங்கி கௌரவித்தார். மருத்து வர் செல்லப்பிள்ளைக்கு இந்திய மருத்துவச் சங்கத்தின் கடலூர் கிளை 2010-ம் ஆண்டு பிசி ராய்விருதை வழங்கியது குறிப்பிடத் தக்கது.

35 ஆண்டுகால மருத்துவப் பணியில் அவர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணி யாற்றியுள்ளார். மாநாட் டில் சங்கத்தின் அமைப்பு தலைவர் அசோக்குமார், தமிழககிளை தலைவர் அருள் பிரகாஷ், மருத்துவர் சபீதா, செயலர் பாபு பாலசிங், பொருளாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்