வேளாண் சட்டத்தைக் கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை

By செய்திப்பிரிவு

விவசாயத்தைப் பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.

விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டியில் அம்பேத்கர் சிலைக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக் களைப் பெற்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு ஆதரிக்கிறது.

விவசாயத்தைப் பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல்காந்தி மிக விரைவில் தமிழகம் வர உள்ளார். ரஜினி மட்டுமல்ல, தமிழகத்தில் புதிதாக யார் கட்சி தொடங்கினாலும் காங்கிரஸ் வரவேற்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்