அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இலவச கொண்டைக் கடலை வழங்கக்கோரி விருதுநகரில் நியாய விலைகடையைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விருதுநகர் முத்துராமன்பட்டி யில் 32 மற்றும் 33-வது வார்டு பகுதி மக்களுக்கான நியாயவிலைக் கடையிலிருந்து 13 தெருக்களைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்குவதுபோல், மாதம் 5 கிலோ கொண்டைக் கடலை வழங்கப்படுகிறது. ஆனால், இலவசமாக வழங்கப்படும் கொண்டைக் கடலை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முத்துராமன்பட்டியில் உள்ள நியாயவிலைக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த பஜார் போலீஸார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொது மக்கள் முற்றுகையை கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago