விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரக்கூடிய விதைகளை வழங்க வேண்டும் என விதை விற்பனை யாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில் துணை இயக்குநர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள 18 வட்டாரங்களில் பரவலாக பருவமழை பெய்துள்ளதால், நீர் ஆதாரம் பெருகி உள்ளது. நீர் ஆதாரத்தின் அடிப்படையில் நெல் சாகுபடியை அதிக அளவில் மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர். இப்பருவத்தில் 15 ஆயிரம் ஹெக் டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடுவதற்காக, இப்பருவத்துக்கேற்ற பல்வேறு ரக நெல் விதைகள் விற் பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக இரு மாவட்ட விதை விற்பனையாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி கிருஷ்ணகிரியில் நடந்தது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். இதில் தருமபுரி விதை ஆய்வு துணை இயக்குநர் பச்சியப்பன் பேசும்போது, விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற அதிக மகசூல் தரக்கூடிய விதைகளை வழங்க வேண்டும். விதைகளை விவசாயி கள் வாங்கும்போது விதை விற்பனையாளர்கள் விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண், காலக்கெடு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு விவசாயிகளிடம் கையெழுத்துப் பெற்ற பின்னரே விதைகள் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இப்பயிற்சியில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் விதை ஆய்வாளர் சரவணன் மற்றும் விதை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago