கடலூரில் 90 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் தங்கமணி தகவல்

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது, 90 சதவீதம் பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மத்தியக் குழு தமிழகம் வந்துள்ளது. நாளை (8-ம் தேதி) இக்குழுவினர் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளனர். புரெவி புயலை பொறுத்தவரை கடலூர் மாவட்டத்தில் அதிகமழை பெய்துள்ளது.

மழைத் தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 90 சதவீதம் பகுதிக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் மட்டும் மின்சாரம் நிறுத்தப் பட்டுள்ளது.

அப்பகுதியில் ஆய்வு செய்து தண்ணீர் வடிந்த பின்னர் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிபாளையம், குமாரபளையத்தில் பொதுசுத்திகரிப்பு நிலையம்அமைக்க நிலம் வாங்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்