திருவாரூர் மாவட்டத்தில் கனமழை யால் பாதிக்கப்பட்ட பெருந்தரக்குடி ஊராட்சிக்குட்பட்ட மேலப்புலியூர், பெருங்குடி ஊராட்சிக்குட்பட்ட அனக்குடி, கல்யாணமகாதேவி, அம்மையப்பன் மற்றும் எண்கண் ஆகிய பகுதிகளை மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். ஆட்சியர் வே.சாந்தா உள்ளிட்டோர் உடனிருந்தார்.
பின்னர், அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறியது:
‘புரெவி’ புயல் காரணமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படாத வகையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் 168 நிவாரண முகாம்களில் 10,703 குடும்பங்களைச் சேர்ந்த 30,375 பேர் தங்கவைக் கப்பட்டுள்ளனர். முகாமில் அவர் களுக்கு தேவையான உணவு, பாய், போர்வை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள் ளன.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 1,111 வீடுகள் சேதமடைந்துள்ளன. 72 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மாவட்டத்தில் 1.37 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள், வீடுகள், கால்நடை களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து சேதங்களும் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago