பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 5 இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மேலப் பாளையத்தில் நடைபெற்ற போராட் டத்துக்கு பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதி தலைவர் புஹாரி சேட் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் சாஹுல் ஹமீது தொடங்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னிஅரசு, விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்ட பேச்சாளர் பாத்திமா நுஸ்ரத் கண்டன உரை நிகழ்த்தினர்.
திருநெல்வேலி மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி, மாவட்ட பொதுச் செயலாளர் ஹயாத் முஹம்மது, மாவட்ட செயலாளர் அலாவுதீன், மாவட்ட பொருளாளர் ஆரிஃப் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேட்டை, ஏர்வாடி, பத்தமடை, திசையன்விளையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மேலப் பாளையத்தில் அண்ணாவீதி, நேதாஜி சாலை, சந்தை ரவுண் டானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தென்காசி
தென்காசி மவுண்ட் ரோட்டில் தமுமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் சலீம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் நைனார்முகமது உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல், தென்காசி கொடிமரத் திடலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் செய்யது மஹ்மூத் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேனா சர்தார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் டேனி அருள் சிங், தமுமுக மாநில செயலாளர் நைனார் முஹம்மது, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவிடி சந்திப்பு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.செய்யது சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.முகம்மது ஜான் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் கே.முகம்மது ரியாஸ்தீன், மாநிலச் செயலாளர் முகமது ஜாபர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செய லாளர் கா.மை. அகமது இக்பால், திராவிடர் விடுதலை கழக மாநில பரப்புரை செயலாளர் பால் பிரபா கரன், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் சுந்தரி மைந்தன் உள்ளிட்டோர் பேசினர். ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago