தி.மலை மாவட்டத்தில்4 அணைகளும் நிரம்புகின்றன

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 அணைகளுக்கும் நீர் வரத்து உள்ளதால், அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

தி.மலை மாவட்டத்தில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று காலை நிலவரப்படி வந்தவாசியில் 12.10 மி.மீ., மழை பெய்துள்ளது. ஆரணியில் 6.80, செய்யாறில் 3, செங்கத்தில் 3.80, ஜமுனாமரத்தூரில் 7.40, சேத்துப்பட்டில் 1, வெம்பாக்கத்தில் 10.3, மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 3.70 மி.மீ., மழை பெய்துள்ளதாக பதிவாகி உள்ளது.

அதே நேரத்தில் திருவண்ணா மலை, போளூர், தண்டராம்பட்டு, கலசப்பாக்கம், கீழ்பென் னாத்தூர் ஆகிய பகுதிகளில் ஓரளவு மழை பெய்துள்ளது.

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து

அதே நேரத்தில் தென் பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதி மற்றும் ஜவ்வாதுமலையில் பரவலாக மழை பெய்துள்ளதால், அணைகளுக்கு நீர் வரத்து தொடர்கிறது. சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 659 கனஅடி தண்ணீர் வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 94.55 அடியாக உள்ளது. அணையில் 3,004 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. குப்பநத்தம் அணைக்கு விநாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வருகிறது. 60 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 33.13 அடியாக உள்ளது. அணையில் 197 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

உபரிநீர் வெளியேற்றம்

மிருகண்டாநதி அணைக்கு விநாடிக்கு 28 கனஅடி தண்ணீர் வருகிறது. 22.97 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 17.22 அடியாக உள்ளது. அணையில் 56 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அதேபோல், செண்பகத் தோப்பு அணைக்கு வரும் 125 கனஅடி தண்ணீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது.

62.32 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம், 57 அடியாக தொடர்ந்து ஒரு வாரமாக பராமரிக்கப்படுகிறது. அணையில் 233 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்