பாபர் மசூதி இடிப்பு தினத்தை யொட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1,700 காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் நேற்று ஈடுபடுத்தப்பட்டனர்.
டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று பலப்படுத்தப்பட்டன. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் 900-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டனர். காட்பாடி மற்றும் வேலூர் கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப் புப்படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகளை ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி கொண்டு சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். அதேபோல், வழிபாட்டு தலங்களி லும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்ட னர். இது மட்டுமின்றி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதி, பஜார் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில், 400 காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை பேருந்து நிலையம், நவல்பூர், வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும், வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப்படையினர் தீவிர கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் 400 காவல் துறையினர் பாதுகாப் புப்பணியில் ஈடுபட்டனர். ஜோலார் பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ரயில் நிலையங்களில் ரயில்வே காவல் துறையினர் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago