கரோனா தடுப்புப்பணியில் சிறப்பாக பணியாற்றிய திருப்பத்தூர் சித்த மருத்துவருக்கு ஆயூஷ் மேம்மை விருது தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வழங்கினார்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய, திருப்பத்தூர் மாவட்ட தலைமை சித்த மருத்துவர் வி.விக்ரம்குமாருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ‘ஆயூஷ் மேம்மை’ விருதினை வழங்கி கவுரவித்தார்.

தமிழக சித்த மருத்துவம் சார்பில் கரோனா நோய்க்கு ‘கபசுர குடிநீர்’ சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தடுப்பு மருந்து என்பதை சித்த மருத்துவம் சார்பில் வெளிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சுகாதாரத்துறை சார்பில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு ‘ஆயூஷ் மேம்மை’ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறைச்செயலாளர் ராதாகிருஷ் ணன் வரவேற்றார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கரோனா நோய் தடுப்புப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி கரோனா சிறப்பு சித்த மருத்துவமனையின் ஒருங் கிணைப்பாளரும், ஆண்டியப்ப னூர் அரசு சித்த மருத்துவமனை யின் தலைமை சித்த மருத்துவ ருமான வி.விக்ரம்குமார் மற்றும் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சித்த மருத்துவர் தில்லைவாணன் ஆகியோருக்கு ‘ஆயுஷ் மேம்மை’ விருதினை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்