ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென ஏ.இ.பி.சி. வலியுறுத்தியுள்ளது.
புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இணையம் வாயிலாக நடைபெற்றது. மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் தலைமை வகித்தார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் (ஏ.இ.பி.சி.)தலைவர் ஏ.சக்திவேல் பேசும்போது, "இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், கனடா போன்ற நாடுகள் இந்திய ஆடை ஏற்றுமதிக்கு மிக முக்கியமான சந்தையாக உள்ளன. வங்கதேசம் போன்ற போட்டி நாடுகள், வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் இதர சலுகைகளை பயன்படுத்தி குறைந்த விலைக்கு ஆடைகளை சந்தைப்படுத்துகின்றன. ஐரோப்பாமற்றும் கனடாவில் போட்டி நாடுகளைவிட குறிப்பிட்ட சதவீதம் ஆடை விலை குறைவாக உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். ஆடை உற்பத்தி துறைக்கும் சிறப்பு அட்வான்ஸ் அங்கீகார திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒரு ஏற்றுமதியாளர் 20 நாட்களுக்குள் ரிஸ்கி எக்ஸ்போட்டர் என்ற நிலையில் இருந்து விடுபட்டு, உரிய தொகையை திரும்பப்பெற வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago