மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற கோரியும், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் திமுக சார்பில் காஞ்சி,செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பில் காவலான் கேட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஆர்.எஸ்.பாரதி தலைமையேற்றார். மாவட்டச் செயலர் க.சுந்தர், க.செல்வம் எம்பி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் சி.வி.எம்.பி. எழிலரசன், புகழேந்தி, ஆர்.டி.அரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி, எல்.செந்தில், இதயவர்மன் மற்றும் சபாபதி மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நாசர், பூபதி, எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொன்னேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் வி.ஜே.கோவிந்தராஜன், முன்னாள் அமைச்சர் சுந்தரம்உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம் தலைமையில் செங்குன்றத்திலும், மாவட்ட செயலர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அயப்பாக்கத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுமாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் தாம்பரம் அஞ்சல் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எம்.சந்திரன், இரணியப்பன், மேரி,வெற்றி, அருள்தாஸ், சிங்காரவேலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
செங்கை மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலர் இ.சங்கர் தலைமையில் கனரா வங்கி முற்றுகைப் போராட்டம் நேற்று நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டோரை தாக்கி அப்புறப்படுத்த முயன்றனர். இதைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட அனைவரும் திருக்கழுக்குன்றம்-கல்பாக்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago