தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டைக்கு சத்ரபதி சிவாஜியின் வாரிசான எம்.பி வருகை

By செய்திப்பிரிவு

மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டைக்கு சத்ரபதி சிவாஜியின் வாரிசான மராட்டிய மாநில மாநிலங்களவை உறுப்பினர் யுவராஜ் சாம்பாஜி ராஜே சத்ரபதி தன் மகனுடன் நேற்று முன்தினம் வருகை தந்தார். சத்ரபதி சிவாஜியின் 13வது வழித்தோன்றலுமான யுவராஜ் சாம்பாஜி ராஜே சத்ரபதி தன் மகன் சபோஜி ராவுடன் செஞ்சி கோட்டையை சுற்றிப்பார்த்துள்ளார். அவருடன் தொல்லியல் துறை அதிகாரிகள், காவல்துறையினர் உடன் இருந்தனர். இது குறித்து கோட்டை அலுவலர்களிடம் கேட்டபோது, செஞ்சி கோட்டையை 8 ஆண்டுகள் சத்ரபதி சிவாஜி தலைமையிடமாக கொண்டு ஆண்டுள்ளதாகவும், இதனால் செஞ்சி கோட்டையில் கண்காட்சி ஒன்றை அமைக்க மகாராஷ்ட்ர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பேரில் இக்கோட்டையை பார்வையிட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், மராட்டிய மாநிலங்களவை உறுப்பினர் யுவராஜ் சாம்பாஜி ராஜே சத்ரபதி கிருஷ்ணகிரி கோட்டை மற்றும் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி கோட்டைக்கும் செல்ல உள்ளதாகவும் தொல்லியல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்