ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவித்தார். இதைக் கண்டித்து வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணி, மேற்கு மாவட்டத் தலைவர் தனபாண்டி உள்ளிட்டோர் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதேபோல், தேனி ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு அந்த அமைப்பின் மகளிரணி மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். வேளாளர் என்ற பெயரை வேறு சமுதாயத்துக்குச் சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago