நெற் பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது நெற்பயிரில் இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. தாக்குதல் அதிகம் உள்ள வயல்களில் அதிக தழைச்சத்து (யூரியா) உரம் இடக்கூடாது. வயலில் வேப்பம் புண்ணாக்கு கலந்த யூரியாவை இட வேண்டும். டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஹெக்டேருக்கு 5 சிசி என்ற அளவில் நட்ட 37, 41, 51-வது நாட்களில் விட வெண்டும். இதன் தாக்குதல் பொருளாதார சேத நிலையை தாண்டும்போது ஹெக்டேருக்கு குளோரான்ட்ரனிலிபுரோல் 150 மி.லி (அல்லது) கார்டாப் ஹைட்ரோகுளைரைடு 1000 கிராம் (அல்லது) புளுபெண்டியமைடு 60 மி.லி (அல்லது) இன்டாக்சகார்ப் 200 மி.லி (அல்லது) குளோர்பைரிபாஸ் 20 இசி 1250 மி.லி மருந்தினை ஒட்டும் திரவத்துடன் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகளின் மீது காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். மருந்துடன் ஒட்டும் திரவம் லிட்டருக்கு 1 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். செயற்கை பைரித்ராய்டு மருந்து அடிப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்