போச்சம்பள்ளி அருகே குதிரைசந்தம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளதால் கிராம மக்கள் அவதியுடன் சென்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் வெப்பாலம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் குதிரைசந்தம்பட்டி. இக்கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, தருமபுரி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல, சுமார் 4 கிமீ தூரத்தில் உள்ள வெப்பாலம்பட்டி கிராமத்துக்கு நடந்து வந்து அங்கிருந்து பேருந்துகள் மூலம் செல்ல வேண்டும்.
குதிரைசந்தம்பட்டியிலிருந்து வெப்பாலம்பட்டி செல்ல மண் சாலை உள்ளது. தற்போது பெய்துள்ள மழையால் சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் நடந்து செல்லவே மிகுந்த சிரமமாக உள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுதொடர்பாக வெப்பாலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் கூறும்போது, குதிரைசந்தம்பட்டி கிராமத்துக்குச் செல்லும் சாலையில் பட்டா நிலம் உள்ளது. இதனால் தார் சாலை அமைப்பதில் சிக்கல் உள்ளது,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago