கூட்டுறவு தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு தொலைபேசியில் தகவல்

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை யில் உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர்கள் பணிக்கு இன்று (டிச.6) எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கடந்த நவ.16-ம் தேதி முதல் இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கரோனா ஊரடங்குக்கு முன் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த தேர்வு நடப்பதை அறியாமல் போய்விடும் வாய்ப்பு இருந்ததால், கரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை ஆள்சேர்ப்பு மையம் இத்தேர்வு எழுத நுழைவு அனுமதி சீட்டு (ஹால்டிக்கெட்) அனுப்பப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களையும், கடந்த 3-ம் தேதி முதல் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு, நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்துவிட்டீர்களா? என கேட்டும், தேர்வு நாளன்று கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வுமையத்துக்கு சிறப்புப் பேருந்து இயக்கப்படுவது குறித்தும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டு தேர்வு நடப்பதை மறந்து விட்டவர்கள் மற்றும் அறியாத வர்களுக்கு கரூர் மாவட்ட கூட்டு றவுத்துறையின் ஆள்சேர்ப்பு மையத்தின் இந்த விசாரணை மற்றும் நினைவூட்டல், தேர்வு குறித்து அறிந்துகொள்ள உதவி வருகிறது. மேலும் சிறப்புப் பேருந்து வசதி குறித்த தகவலும் உதவியாக அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE