தமிழ்நாடு தொழிலாளர் துறையின்சார்பில், கட்டுமானத் தொழிலில்அனுபவம் இருந்து, உரிய சான்றிதழ் இல்லாத தொழிலாளர்களுக்கு, கட்டுமான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கொத்தனார், கம்பி வளைத்தல், பிளம்பர், தச்சுத்தொழில், கட்டிட வேலை, மேற்பார்வையாளர், எலக்ட்ரீசியன், டைல்ஸ் கல் பதிப்பது, பெயின்டர், நில அளவையர் ஆகிய பணி பிரிவுகளில் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தமிழகத்தை சேர்ந்தவராகவும், கட்டுமான பணியில் குறைந்தது 4 ஆண்டு அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சி 3 நாட்கள் அளிக்கப்படும்.பயிற்சியின்போது நாள் ஒன்றுக்குரூ. 500 வீதம், ரூ. 1,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
திருநெல்வேலி திருமால் நகரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல்,கல்விச்சான்று நகல் மற்றும் தொழிலாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் நான்கு ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
இத்தகவலை, திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு) ஜெ.காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago