வேலூர் மாநகராட்சியில் உள்ள தனியார் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்களில் கட்டாயம் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் சித்ரசேனா தெரிவித்துள்ளார்.
வேலூர் மாநகராட்சி பகுதி யில் பதிவு செய்யப்பட்ட செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் 17 வாகனங்கள் உள்ளன. இவர்கள், முறையாக விதிகளை பின்பற்றுவது தொடர்பான கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர நல அலுவலர் டாக்டர் சித்ரசேனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செப்டிக் டேங்க் வாகன உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாநகர நல அலுவலர் பேசும்போது, ‘‘வாகன உரிமையாளர்கள் மாநகராட்சி பகுதியில் பணி நிமித்தமாக எங்கு சென்றாலும் மாநகராட்சி அதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பணி செய்ய வேண்டும். தொழிலாளர்களை செப்டிக் டேங்குக்குள் இறக்கி வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது. வாகனங்களை முறையாக பராமரித்திருக்க வேண்டும்.
தொழிலாளர்களை குடும்ப காப்பீடு திட்டத்தில் இணைத் திருக்க வேண்டும். 3 மாதங் களுக்கு ஒருமுறை அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கான வசதிகள் இல்லாவிட்டால், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோ தனை செய்துகொள்ள ஏற்பாடு செய்துகொள்ளலாம். அனைத்து வாகனங்களிலும் கட்டாயம் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண் டும்’’ என்றார். கூட்டத்தில், மண்டல சுகாதார அலுவலர்கள் சிவக்குமார், லூர்துசாமி, முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago