திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்நிலைகள் அருகே செல்பி எடுக்கக்கூடாது ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்நிலைகளை கடக்கவும், குளிக் கவும், வேடிக்கை பார்க்கவும், செல்பி எடுக்கவும் கூடாது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித் துள்ளார்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பெய்து வரும் மழையால் ஏரிகள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணை 94.10 அடியாகவும், 60 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணை 34.11 அடியாகவும், 62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணை 57 அடியாகவும் உள்ளது.

மேலும், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரி களில் 92 ஏரிகள் 100 சதவீதம் நிரம் பியுள்ளன. 99 முதல் 75 சதவீதம் வரை 93 ஏரிகளும், 74 முதல் 50 சதவீதம் வரை 194 ஏரிகளும், 49 முதல் 25 சதவீதம் வரை 205 ஏரிகளும், 25 சதவீதத்துக்கும் குறைவாக 113 ஏரிகளிலும் தண்ணீர் உள்ளது.

இதேபோல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,253 ஏரிகளில் 132 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 99 முதல் 91 சதவீதம் வரை 63 ஏரிகளும், 90 முதல்81 சதவீதம் வரை 136 ஏரிகளும், 80 முதல் 71 சதவீதம் வரை 199 ஏரிகளும், 70 முதல் 51 சதவீதம் வரை 175 ஏரிகளும், 50 முதல் 26 சதவீதம் வரை 273 ஏரிகளும், 25 சதவீதத்துக்கு குறைவாக 275 ஏரிகளிலும் தண்ணீர் உள்ளது.

நீர் நிலைகள் கிடுகிடுவென நிரம்பி வருகிறது. ஆறு மற்றும் கால்வாய்களுக்கு நீர்வரத்து திடீரென அதிகரிக்கக்கூடும். இதனால் பொதுமக்கள், இளை ஞர்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் நீர்நிலைகளை கடக்கக்கூடாது. அதேபோல் குளிக்கவும், வேடிக்கை பார்க் கவும், தண்ணீரில் இறங்கவும், செல்பி புகைப்படம் எடுக்கவும் கூடாது. மேலும், நீர்நிலைகள் அருகே கால்நடைகள் செல்லாமலும்,கடக்காமலும் பாதுகாப்பாக வைத் திருக்க வேண்டும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்