வேளாண் சட்டங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

By செய்திப்பிரிவு

பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து சேத்துப்பட்டில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தி.மலை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் மறியல் நடைபெற்று வருகிறது. அதன்படி, சேத்துப்பட்டு நான்கு முனை சந்திப்பு அருகே நேற்று நடைபெற்ற சாலை மறியலுக்கு வட்டார குழு செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். அப்போது, விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ள பாஜக அரசை கண்டித்தும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் கண்டன உரையாற்றினார்.

இதில், வட்டார குழு உறுப்பினர் கள் சேகர், மணிவண்ணன், தங்க மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதேபோல், தி.மலை, செங்கம், கலசப்பாக்கம் உட்பட பல இடங் களில் நடைபெற்ற மறியலில் பங் கேற்ற 150-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்