கடந்த 2009-ம் ஆண்டு புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், இதுவரை மாவட்ட நீதிமன்றகட்டமைப்பானது வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. குமரன் சாலையிலுள்ள வழக்கமான நீதிமன்ற கட்டிடங்களில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது பல்லடம் சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் 10 ஏக்கர் பரப்பில் நிலம் ஒதுக்கப்பட்டு, ரூ.37 கோடி மதிப்பில்ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டமைக்க திட்டமிடப்பட் டது. அனைத்து பணிகளும் பெரும்பான்மையாக முடிக்கப் பட்டு, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில்இதன் திறப்பு விழா நடைபெறஉள்ள நிலையில், ஒருங்கி ணைந்த நீதிமன்ற கட்டிட வளா கத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் நேற்று ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago