திருப்பூர் மாவட்டத்தின் புதிய வாக்காளர் பட்டியலில் இடம் மாறுதலாகி சென்ற முன்னாள் ஆட்சியர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பில் அலட்சியம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார்

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தின் புதிய வாக்காளர் பட்டியலில், 10 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய முன்னாள் ஆட்சியர் மற்றும் மாற்றலாகி சென்ற மற்றோர் ஆட்சியர் மற்றும்அவர்களது குடும்பத்தினர் பெயர் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

திருப்பூர் வடக்கு சட்டப்பேர வைத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில், 10 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியராக இருந்த சமயமூர்த்தி, அவரது மனைவி தீபிகா ஆகியோரின் பெயர்களும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புஆட்சியராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, அவரது மனைவி கீதா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இதன்மூல மாக, கடந்த 10 ஆண்டுகளாக வாக் காளர் பட்டியல் திருத்தப்படாமல் உள்ளது என்ற சந்தேகம் எழுகிறது.

மாவட்ட தேர்தல் அலுவலர்க ளாக ஆட்சியர்களே இருக்கும்போது, அவர்கள் இடம்மாறும் போது பெயர்களும் மாற்றப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை கள ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனவே, தற்போது வெளியிடப் பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை முழுமையாக மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பழைய அதிகாரிகள் மட்டுமின்றி, தொகுதியில் இல்லாத பொதுமக்களின் பெயரை நீக்க வேண்டும். உரிய முறையில் கள ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளோம்" என்றார்.

திருப்பூர் மாவட்ட தேர்தல் வட்டாட்சியர் ரவீந்திரன் கூறும் போது, "பழைய ஆட்சியர்கள் பெயர் இடம்பெற்றது தொடர்பாக எனக்கு புகார் எதுவும் வரவில்லை. கோட்டாட்சியரிடம் அரசியல் கட்சியினர் அளித்த புகார் தொடர் பாக கேட்கிறேன்" என்றார்.

பெயர்கள் நீக்கப்படும்

திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன் ‘இந்து தமிழ்’ செய்தியா ளரிடம் கூறும்போது, "ஆட்சியர் பெயர் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டிய லில் இடம்பெற்றுள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். அனைவரிடமும் படிவம் 7 பெற்று, முறைப்படி நீக்க வேண்டுமென அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆய்வு செய்து பெயர்கள் நீக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்