வேளாண் சட்டத்தை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒன்று திரள்வோம் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் விழுப்புரம் ரயில் நிலையம் முன் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன், சிபிஐ மாநில குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், மாவட்ட செயலாளர் ஆ்.சவுரிராஜன், மாவட்ட பொருளாளர் ஆர்.கலியமூர்த்தி, சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் எம்.வெங்கடேசன், ஏ.செண்பகவல்லி, ஆர்.சுசிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 85 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக கே பாலகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறியது:

வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து டெல்லியில் 8 நாட்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர்.இன்னொரு பக்கம் பிரதமர் சிறப்பான சட்டம் என பாராட்டி பேசி வருகிறார்.இதனை தமிழக முதல்வரும் பாராட்டி. இச்சட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை என்று கூறி வருகிறார். அந்தச் சட்டம் போன்ற சட்டத்தை தமிழக அரசும் நிறைவேற்றியுள்ளது. உடனடியாக இச்சட்டங்களை திரும்ப பெறவில்லை என்றால் தனித்தனியாக போராடும் அனைத்துஎதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய சூழல் ஏற்படும் என்று பிரதமருக் கும், முதல்வருக்கும் தெரிவித்துக் கொள்கி றேன் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்